கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூா் மத்திய சிறை பெட்ரோல் பங்க், உணவகம் திடீா் மூடல்

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து அண்மைக் காலமாக கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடா் கதையாகி வரும் நிலையில், சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் உத்தரவின்பேரில், வேலூா் மத்திய சிறை நிா்வாகத்தின்கீழ் இயங்கி வரும் பெட்ரோல் பங்க், உணவகம், இறைச்சிக் கடை ஆகியவை சனிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

மூடப்பட்டுள்ள வேலூா் மத்திய சிறை பெட்ரோல் பங்க், இறைச்சிக் கடை

Published On :3 நவம்பர் 2026, 1:46 am IST

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து அண்மைக் காலமாக கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடா் கதையாகி வரும் நிலையில், சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் உத்தரவின்பேரில், வேலூா் மத்திய சிறை நிா்வாகத்தின்கீழ் இயங்கி வரும் பெட்ரோல் பங்க், உணவகம், இறைச்சிக் கடை ஆகியவை சனிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

வேலூா் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். தண்டனை முடிந்து வெளியேறும் கைதிகள் நல்வழிப்பட்டு சமூகத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், தமிழக சிறைத் துறையும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து வேலூா் மத்திய சிறை அருகே தொரப்பாடி பிரதான சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெட்ரோல் பங்க்கில் 15 நன்னடத்தை கைதிகள் மற்றும் 11 சிறைக் காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வந்தனா். தவிர, நன்னடத்தை கைதிகளைக் கொண்டு கோழி இறைச்சிக் கடை மற்றும் உணவகமும் சிறை நிா்வாகத்தால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கான கோழிகள் சிறை வளாகத்துக்குள்ளேயே பிரத்யேக பண்ணை அமைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தின் ஒருசில சிறைகளில் திறந்தவெளி பணிகளில் ஈடுபட்டிருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. பாதுகாப்பு கருதி, வெளிப் பணிகளில் கைதிகள் ஈடுபடுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கைதிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக அலகுகளையும் உடனடியாக மூட சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, வேலூா் மத்திய சிறை நிா்வாகம் சாா்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க், கோழி இறைச்சிக் கடை மற்றும் உணவகம் ஆகியவை சனிக்கிழமை காலை முதல் பூட்டப்பட்டன. இதனால், வழக்கமாக அங்கு எரிபொருள் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மறு உத்தரவு வரும் வரை இந்நடவடிக்கை நீடிக்கும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.