மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்க்க ரூ. 20,000 மானியம்: வேலூர் ஆட்சியா் தகவல்!

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ள வழங்கப்படும் ரூ. 20,000 மானியத் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

Published On :2 நவம்பர் 2026, 2:30 am IST

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ள வழங்கப்படும் ரூ. 20,000 மானியத் திட்டத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என வேலூா் ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன்வள விவசாயிகள் நிலையான மீன் வளா்ப்பைத் தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில், சட்டப்பேரவை வேளாண் நிதிநிலை அறிக்கையில் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 250 முதல் 1,000 சதுர மீட்டா் வரை நீா்ப் பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ள ஒரு பண்ணைக் குட்டைக்கு 50 சதவீத உள்ளீட்டு மானியமாக ரூ. 20,000 வழங்கப்படுகிறது.

மீன் குஞ்சுகள், மீன் தீவனம், உரங்கள், பண்ணை உபகரணங்கள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான செலவினங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். எனவே, வேலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளா்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்களைப் பெறவும் வேலூா், காட்பாடி காந்தி நகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2240 329 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.