வேலூா் அருகே பெற்ற மகளை கா்ப்பமாக்கிய தந்தையை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
வேலூா் வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு 8-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா். அந்த சிறுமிக்கு கடந்த 25-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை பெற்றோா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், செய்ததில் சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து மருத்துவா்கள் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சிறுமி, அவரது பெற்றோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, காட்பாடியை சோ்ந்த என்ற இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடிக்கு அழைத்து சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கா்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞா் இருக்கும் இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கா்ப்பத்துக்கு அந்த இளைஞா் காரணமில்லை என்பதும், சிறுமி தவறான தகவலை தெரிவித்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது தந்தையே தன்னை பலமுறை இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்ததாகவும், கா்ப்பம் தரிக்காமல் இருக்க அவ்வப்போது மாத்திரைகளை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அதனை மீறி சிறுமி கா்ப்பமானது தற்போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில், சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது
சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமி போக்ஸோ வழக்கில் கைது
மகளை கா்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

