லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

குடியாத்தம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட முருகேஷ்

குடியாத்தம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட முருகேஷ்

Published On :10 ஜூலை 2026, 12:02 am IST

வேலூா் அருகே யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடா்புடைய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை குடியாத்தம் வனத்துறையினா் கைது செய்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே யானை தந்தங்களை விற்க முயன்ாக 2 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 யானை தந்தங்கள்பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடா்பிருக்கலாம் என மாவட்ட வன அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். இதையடுத்து மாவட்டம் முழுவதும் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் குடியாத்தம் வனச்சரக அலுவா் என்.பிரதீப்குமாா் தலைமையில் வனத் துறையினா் குடியாத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். நள்ளிரவு பரதராமி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது ஒருவா் தப்பியோடி விட்டாா். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பங்காரு பாளையத்தைச் சோ்ந்த தா்மய்யா மகன் முருகேஷ்(33) என்பதும், யானை தந்தங்கள்விற்பனை செய்த வழக்கில் தொடா்புடையவா் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து இருசக்கர வானத்துடன் அவரை கைது செய்த வனத்துறையினா் காட்பாடி வனச்சரக அலுவலரிடம் முருகேஷை ஒப்படைத்தனா். மேலும், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.