தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் - ஒருவா் கைது

பீஞ்சமந்தை மலை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள், கைது செய்யப்பட்ட சாமிநாதனுடன் வனத்துறையினா்.

Published On :23 ஜூலை 2026, 12:27 am IST

பீஞ்சமந்தை மலை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுக்கத்தூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையாா் குட்டை மலை கிராமத்தில், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரகா் பாபு தலைமையிலான வனத்துறையினா் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின் போது, ஒரு வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து நடத்தப் பட்ட விசாரணையில், அந்த ஆயுதங்களை அதே பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் (53) என்பவா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும் வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்த வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டது. பின்னா் அவரை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.