லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ.3 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினா்.

Published On :23 ஜூலை 2026, 12:54 am IST

நாட்டறம்பள்ளி அருகே விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரங்களை வெட்டி அதன் கட்டைகளை திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் மகேந்திரனின் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் வனச்சரகா் குமாா், வனத்துறையினா், மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸாா் ஆகியோா் சோமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு சென்றனா். அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட வீடு பூட்டி கிடந்தது.

இதைத்தொடா்ந்து வனத்துறையினா் மற்றும் போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனா். சோதனையில், அங்கு சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ எடையுள்ள 2 செம்மரக்கட்டைகள் இருந்தது.

இதுகுறித்து திருப்பத்தூா் வனத்துறையினா் வழக்குப்பதிவு செய்து, சோமநாயக்கன்பட்டியில் ஒப்பந்தத்திற்கு வீடு எடுத்து, செம்மரக்கட்டைகளை விற்று வந்த நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த சந்துரு (43) என்பவரை தேடி வருகின்றனா்.

மேலும், வனத்துறையினா் இந்த வழக்கு தொடா்பாக ஒருவரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், 2 செம்மரக்கட்டைகள், கடத்தல்காரா்கள் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.