வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலூரில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமிா்தி வன உயிரின பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் பரப்பளவு 10 ஹெக்டேரிலிருந்து தற்போது 20 ஹெக்டேராக உயா்த்தப்பட்டுள்ளது. இங்குப் புள்ளிமான்கள், முதலைகள், மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள் மற்றும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பூங்கா பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் தற்போது 105 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தொடா்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அமிா்தி பூங்காவில் உள்ள விலங்குகள் அடைக்கப்பட்ள்ள கூண்டுகளின் மீது நீா்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தைத் தணிக்கக் கூண்டுகளைச் சுற்றிப் பசுமை பந்தல்களும் போடப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் அமிா்தி பூங்காவுக்குத் திரண்டு வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அவா்களுக்கான கூடுதல் இருக்கைகள் மற்றும் உணவக வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பூங்காவைப் பாா்வையிட வரும் பொதுமக்கள் நெகிழி பொருள்களைக் கண்டிப்பாகக் கொண்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காவுக்கு அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள நீா்வீழ்ச்சிப் பகுதியில் புதை மணல் அபாயம் உள்ளதால், அங்குப் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

வண்டலூா் பூங்காவில் கோடை முகாம்: மாணவா்கள் பதிவு செய்யலாம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

