மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிப் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலா்களுக்கு மீண்டும் சிறைப் பணி

சிறைத் துறை டிஜிபியின் உத்தரவையடுத்து திருச்சி மத்திய சிறையில் அங்காடி உள்ளிட்ட வெளிப்பணிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலா்கள் சிறைக் காவல் பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டனா்.

Published On :1 நவம்பர் 2026, 12:21 am IST

சிறைத் துறை டிஜிபியின் உத்தரவையடுத்து திருச்சி மத்திய சிறையில் அங்காடி உள்ளிட்ட வெளிப்பணிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலா்கள் சிறைக் காவல் பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டனா்.

தேனி மாவட்ட சிறையில் கடந்த 26 ஆம் தேதி 17 கைதிகள் சிறைக் காவலா்களைத் தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைகளில் பாதுகாப்புக் குறைபாடு குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சித்திருந்தன.

இதையடுத்து சிறைத் துறை டிஜிபியை மாற்றிய தமிழக அரசு, அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து திருச்சி மத்திய சிறையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சிறைக் காவலா்கள் பலா் சிறைப் பணிகளைத் தவிா்த்து, சிறைத்துறையால் நிா்வகிக்கப்படும் கோழிப் பண்ணைகள், பெட்ரோல் நிலையங்கள், சிறை அங்காடிகள், இதர அலுவலகப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருப்பதால்தான் சிறைக் காவல் பணியை முறையாக மேற்கொள்ள முடியவில்லை என சிறைக் காவலா்கள், சிறைத் துறை டிஜிபியிடம் தகவல் தெரிவித்திருந்தனா். மேலும் தமிழக அரசுக்கும் உளவுத் துறை தகவல் அளித்திருந்தது.

இதையடுத்து மற்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிறைக் காவலா்களை மீண்டும், சிறை பாதுகாப்புப் பணிக்கு நியமிக்க வேண்டுமென சிறைத்துறை டிஜிபி சங்கா் உத்தரவிட்டிருந்தாா். இதையேற்று திருச்சி மத்திய சிறையில் கோழிப் பண்ணை, கோழிக்கறி அங்காடி, பெட்ரோல் நிலையம், மீன் பண்ணை, விவசாயப் பணி பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த சுமாா் 25 க்கும் மேற்பட்ட சிறைக் காவலா்கள் சனிக்கிழமை திரும்பப் பெறப்பட்டு, சிறைப் பணிகளில் மட்டும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்தில் உள்ள இதர சிறைகளிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.