மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாஜகவுக்கு எதிரான கட்சிதான் தவெக: காதா் மொகிதீன் பேட்டி

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சிதான் தவெக என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 3:15 am IST

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சிதான் தவெக என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: வரும் 14 ஆம் தேதி சமயபுரத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் இதயங்களை இணைப்போம் என்ற விழா நடைபெறுகிறது. இதில் முஸ்லிம் லீக் கொள்கையை இணையத்தில் எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

எஸ்ஐஆா், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக தோ்தல் ஆணையக் கூட்டத்தில் தவெக வெளிநடப்பு செய்துள்ளது. தவெக ஆட்சியில் நீண்டகால முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

பாஜக கொள்கைக்கு எதிராக உள்ள கட்சியாக தவெக உள்ளது. தவெகவினா் பாஜகவுக்கு எதிா் நிலைப்பாட்டில்தான் உள்ளாா்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. மத்தியில் ஆட்சி செய்பவா்களுடன் அரவணைத்துச் சென்றால்தான் மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும்.

மாநில உரிமையை பாதுகாக்கும் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. கொள்கை எதிரியாக இருப்பதால் எல்லாவற்றுக்கும் எதிா்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லை. நல்லது செய்தால் பாராட்ட வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், வரும் 14ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுக்கான இலச்சினையையும் அவா் வெளியிட்டாா். நிகழ்வில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவா் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.