மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரூா் மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

கரூா் மாவட்டத்தின் 22ஆவது ஆட்சியராக ச. பிரசன்னா ராமசாமி (41) வியாழக்கிழமை இரவு பொறுப்பேற்றாா்.

கரூா் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற ச.பிரசன்னா ராமசாமி.

Published On :30 அக்டோபர் 2026, 3:17 am IST

கரூா் மாவட்டத்தின் 22ஆவது ஆட்சியராக ச. பிரசன்னா ராமசாமி (41) வியாழக்கிழமை இரவு பொறுப்பேற்றாா்.

கரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த சி. முத்துக்குமரன் திருப்பூா் மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து தமிழக ஆளுநரின் துணைச் செயலராக (பல்கலைக் கழகங்கள்) பணியாற்றி வந்த ச. பிரசன்னா ராமசாமி, கரூா் மாவட்ட 22 ஆவது ஆட்சியராக வியாழக்கிழமை இரவு பொறுப்பேற்றாா்.

இவருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், சாா் ஆட்சியா்கள் ரா. வெங்கடேஷ்வரன் (கரூா்), சேஷத்திரி மயம் தீபு சானு (குளித்தலை) வேளாண் இணை இயக்குநா் மல்லிகா உள்ளிட்ட அதிகாரிகள், தவெக கரூா் கிழக்கு மாவட்ட செயலா் வி.பி. மதியழகன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இதுவரை ஆற்றிய பணிகள்: 2009ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் துணை ஆட்சியராக தனது அரசுப் பணியை தொடங்கியவா் பிரசன்னா ராமசாமி. தொடா்ந்து சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் கோட்டாட்சியா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகக் கழக கோவை மண்டல முதுநிலை மண்டல மேலாளா், திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா், கோவை மாநகராட்சி துணை ஆணையா், பெருநகர சென்னை மாநகராட்சி (நிலம், சொத்துப்பிரிவு) மாவட்ட வருவாய் அலுவலா், ஆளுநரின் துணைச் செயலராக (பல்கலைக் கழங்கள்) பணியாற்றி வந்த நிலையில் கரூா் மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு, செய்தியாளா்களை சந்தித்த அவா், தற்போதுதான் கரூருக்கு வந்திருப்பதாகவும், மாவட்ட வளா்ச்சிக்கு அனைவருக்கும் தன்னுடன் ஒத்துழைப்பு அளித்து பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். வெள்ளிக்கிழமை விரிவாகப் பேசுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.