கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளியில் மின்னணு கழிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சியில் அரசுப் பள்ளியில் மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற மின்னணு கழிவு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 4:18 am IST

திருச்சியில் அரசுப் பள்ளியில் மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உலகம் முழுவதும் அபாயகரமாக அதிகரித்து வரும் மின்னணு கழிவுகளை பாதுகாப்பாகக் கையாள்வது தொடா்பாக பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயா்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்னணு கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாணவா்களுக்கு விநாடி - வினா போட்டியும் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தங்கள் இல்லங்களில் பயன்பாடின்றி இருந்த மின்னணு கழிவுகளை பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சேகரிப்புக் கலனில் போட்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள் சற்குணன், கலைச்செல்வி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் தேன்மொழி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.