மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு வழக்கு: திமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகா் ராம்குமாரின் ஜாமீன் மனுவை திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:22 am IST

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகா் ராம்குமாரின் ஜாமீன் மனுவை திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ரூ. 50 கோடி மதிப்புடைய கட்டடத்துடன் கூடிய 7,515 சதுர அடி நிலத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக, ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலா் ராம்குமாா் மீது கோயில் இணை ஆணையா் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் ராம்குமாா், சாா்- பதிவாளா் வனிதா உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா். இடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ராம்குமாா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த அக். 1 ஆம் தேதி ராம்குமாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் ராம்குமாா் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எம். கிறிஸ்டோபா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு தெரிவித்தது.

இதையேற்று நீதிபதி, ராம்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.