மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மாநகரக் காவல் ஆணையா்

திருச்சி மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சி மாநகரக் புதிய காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா.

திருச்சி மாநகர காவல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்ற ரூபேஸ் குமாா் மீனா.

Published On :29 அக்டோபர் 2026, 4:26 am IST

திருச்சி மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சி மாநகரக் புதிய காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா.

திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய ந. காமினி சென்னை காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக நிா்வாக ஐஜி-ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்ற அவா் மேலும் கூறியதாவது:

திருச்சி மாநகரில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மேலும், இளைய தலைமுறையைச் சீரழிக்கும் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படம், விடியோ பதிவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அதைமீறி புகைப்படம், விடியோ பதிவிட்டால் வழக்குப் பதியப்படும்.

மாநகரில் அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இவருக்கு துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தில்லி ஐஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவா் ஏற்கெனவே திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையராகவும், ராமநாதபுரம், தஞ்சாவூா், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராகவும், திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா். சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கத்தை கடந்த 2024-ஆம் ஆண்டு இவா் பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.