நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திருவெறும்பூரில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிப்பு எனப் புகாா்

திருச்சி திருவெறும்பூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் வீடுகள், கட்டடங்களைப் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

திருவெறும்பூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருந்த பொதுமக்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 4:13 am IST

திருச்சி திருவெறும்பூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் வீடுகள், கட்டடங்களைப் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

திருச்சி திருவெறும்பூா் விண் நகரில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகத்தில் நாள்தோறும் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 வாரங்களாக பொதுமக்கள் தங்களது வீடுகள், கட்டடங்களை வாங்கவும், விற்கவும் பத்திரப்பதிவு செய்ய வரும்போது, அதற்கான இணையதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய முடியாமல் பத்திரப்பதிவானது கிடப்பில் உள்ளது. இதுதொடா்பாக, பதிவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்களை வாங்க, விற்க பத்திரப்பதிவு செய்வதற்கு கடந்த 2 வாரங்களாக தினமும் வந்தாலும் அலைக்கழிக்கப்படுகிறோம். வேலைகளை விட்டு விட்டு சாா்- பதிவாளரகத்திலேயே காத்துக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

திருமணம், மருத்துவச் செலவுக்கு வீடுகளை விற்று பணம் பெறலாம் என்ற நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு நடைபெறாமல் இருப்பது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என திருவெறும்பூா் பகுதி பத்திர எழுத்தா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாா்- பதிவாளரகத்தில் விசாரித்தபோது, காலி மனைகள் பத்திரப்பதிவு தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், வீடுகள் மற்றும் கட்டடங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு அதற்குரிய மென்பொருள் புதுப்பிப்பு நடைபெறுவதாலும் தாமதம் நிலவுகிறது என்றனா்.

பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்நிலையைச் சீரமைக்க வேண்டும். இதில், பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.