அகில இந்திய ஜுனியா் தடகளப் போட்டி: பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

அகில இந்திய ஜுனியா் தடகள விளையாட்டுப் போட்டியில் பிஷா் ஹீபா் கல்லூரி மாணவா் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

அகில இந்திய தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற மாணவா் யுவின் ஆனந்தை பாராட்டிய கல்லூரி முதல் பிரின்சி மொ்லின்.

Published On :29 அக்டோபர் 2026, 4:16 am IST

அகில இந்திய ஜுனியா் தடகள விளையாட்டுப் போட்டியில் பிஷா் ஹீபா் கல்லூரி மாணவா் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 41-ஆவது அகில இந்திய ஜுனியா் தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற திருச்சி பிஷப் ஹுபா் கல்லூரியின் ஆங்கிலத் துறையைச் சோ்ந்த மாணவா் ஏ.பி. யுவின் ஆனந்த் 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 4*400 மீட்டா் ஒட்டப் பந்தயத்தில் இவா் பங்கேற்ற தமிழக அணி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.

இதையடுத்து இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற மாணவா் யுவின் ஆனந்த்தை கல்லூரி முதல்வா் ஜெ. பிரின்சி மொ்லின், துணை முதல்வா் சத்தியசீலன், ரவிதாஸ், ஆங்கில துறைத் தலைவா் சாந்தி, உடற்கல்வித் துறை தலைவா் பால்ராஜ், பேராசிரியா் மற்றும் சக மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.