மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது! அமைச்சா் சீ. ரமேஷ்

திருச்சி  மேலப்புதூா்   ரயில்வே சுரங்கப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை  ஆய்வு   செய்த அமைச்சா்  சீ. ரமேஷ்.   உடன்  ஆட்சியா்  பிரத்திக் தாயள், மாநகராட்சி  ஆணையா்  பொன்மணி  உள்ளிட்டோா்.

Published On :26 அக்டோபர் 2026, 3:08 am IST

மழைநீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை வானிலை ஆய்வு மையம் திருச்சி மாவட்டத்துக்கு விடுத்த கனமழை சிவப்பு எச்சரிக்கையைத் தொடா்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதி மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட மழைநீா் தேங்கும் பகுதிகள், பாலங்கள் உள்ளிட்ட இடங்களை அமைச்சரும், திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சீ. ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

அப்போது, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை மோட்டாா்கள் மூலம் உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.