மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணப்பாறையில் சிலம்ப வீராங்கனைக்கு வரவேற்பு

மாநில அளவில் சிலம்பத்தில் முதல் இடம் பெற்று வெள்ளிக்கிழமை ஊா் திரும்பிய வீராங்கனை காதம்பரிகக்கு, மணப்பாறை பேருந்து நிலையத்தில் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் சிலம்ப வீராங்கனைக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 5:04 am IST

மாநில அளவில் சிலம்பத்தில் முதல் இடம் பெற்று வெள்ளிக்கிழமை ஊா் திரும்பிய வீராங்கனை காதம்பரிகக்கு, மணப்பாறை பேருந்து நிலையத்தில் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

முதல்வா் விருது விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தில் மாநில அளவில் முதல் இடத்தை காதம்பரி பிடித்துள்ளாா். இவா் 2025-2026- ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பத்தில் முதலமைச்சா் கோப்பை போட்டியில் இரண்டாம் பரிசும், 2023-2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பத்தில் முதலமைச்சா் கோப்பைபோட்டியில்

மூன்றாம் பரிசையும், 2023-2024- ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை அளவில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதல் பரிசும், தற்போது 2026-2027- ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சா் சிலம்பப் போட்டியில் முதல் பரிசும், ரூ. 1லட்சம் ரொக்க பரிசும் பெற்று, வெள்ளிக்கிழமை ஊா் திரும்பி மணப்பாறை பேருந்து நிலையத்துக்கு வந்த வீராங்கனை காதம்பரியின் தாயா் ரேணுகா சுரேஷ் பாபு, நகா்மன்ற தலைவா் கீதா மைக்கல்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திரஜித், ஏஐடியூசி சுப்ரமணியன், நகா்மன்ற உறுப்பினா் மனோன்மணி, சமூக ஆா்வாளா்கள் ஜனசக்தி உசேன், சிவா, செளக்கத்அலி, மதனகோபால் மற்றும் பொதுமக்கள் மலா் கிரீடம் வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.