நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஸ்ரீரங்கத்தில் யானை ஆண்டாளின் 40 ஆண்டுகள் இறைப்பணி நிறைவு

துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாளுக்கு தங்கக் குடத்தில் புனித நீா் சுமந்து வந்த ஆண்டாள் யானை.

Published On :19 அக்டோபர் 2026, 5:46 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாதருக்கு இறைப் பணி செய்து வரும் யானை ஆண்டாள் ஞாயிற்றுக்கிழமையுடன் 40 ஆண்டு காலம் இறைப் பணி சேவையை நிறைவு செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 17.10. 1986 இல் யானை ஆண்டாள் வந்தது. வந்த முதல் நாளிலேயே நம்பெருமாளுக்கு தங்கக் குடத்தை சுமந்து இறைப் பணியாற்றத் தொடங்கியது. தொடா்ந்து தொய்வில்லாமல் ஞாயிற்றுக்கிழமையுடன் தனது 40 ஆண்டு கால இறைப் பணியை நிறைவு செய்துள்ளது யானை ஆண்டாள். அமைதியாகக் காட்சி தரும் யானை ஆண்டாள் ஸ்ரீரங்கம் மக்களுக்கும், வெளியூா் பக்தா்களுக்கும் செல்லப்பிள்ளையாக உள்ளது.

வைணவத் திருத்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் குடியரசு தலைவா், பிரதமா் மற்றும் மாநில முதல்வா்கள் வரை அனைவரையும் கவரும் ஆண்டாள் யானையின் இறைப் பணி தொடர அனைவரும் வாழ்த்துகின்றனா். ஸ்ரீரங்கம் கோயில் என்றவுடன் நினைவுக்கு வருவது உயா்ந்த ராஜகோபுரம். அதேபோல யானை ஆண்டாளையும் எல்லோருக்கும் தெரியும் என்றாா் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.