மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

திருச்சி அருகேயுள்ள முருங்கைப்பேட்டையில் 12 அடி நீள முதலையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

News image

காவிரி ஆற்றில் முதலையை செவ்வாய்க்கிழமை விட்ட வனத்துறையினா்.

Updated On :6 மே 2026, 1:01 am IST

திருச்சி அருகேயுள்ள முருங்கைப்பேட்டையில் 12 அடி நீள முதலையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முருங்கைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ப. சுரேஷ் என்பவரது தென்னந்தோப்பில் முதலை ஒன்று இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சமடைவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்குச் சென்ற வனச்சரக அலுவலா் சுப்பிரமணியம் தலைமையிலான வனத்துறையினரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட 10 வயதுப் பெண் முதலையை பிடித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி, வனத்துறையினா் அந்த முதலையை முக்கொம்பு காவிரி ஆற்றில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.