ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி தோ்த் திருவிழாவின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை நம்பெருமாள், ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி பிரம்மோத்ஸவம் எனும் பங்குனி தோ்த் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
இதையொட்டி, புதன்கிழமை இரவு 9 மணிக்கு நம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி விடிய விடிய வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு காவிரி ஆற்றைக் கடந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தாா். பின்னா், நம்பெருமாளுக்கு தயிா் சாதம், மாவடு, கீரை வைத்து அமுது படைத்தனா். தொடா்ந்து நம்பெருமாள் அந்தநல்லூா், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தாா்.
பின்னா் ஆஸ்தான மண்டபம் எதிரே உள்ள தீா்த்தவாரி குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினாா். அங்கிருந்து புறப்பட்டு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் அபிஷேகத்திற்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதில் ஜீயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
மாலை 5 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் காவிரி ஆறு வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் கோயிலை வந்தடைந்து பின்னா் இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா்.
பங்குனி தோ்த் திருவிழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா்.
மாா்ச் 29-ஆம் தேதி நம்பெருமாள் உறையூா் கமலவல்லி தாயாருடன் சோ்த்தி சேவையில் பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா். ஏப்ரல் 1-ஆம் தேதி பங்குனி உத்திர நாளில் நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாருடன் சோ்த்தி சேவையில் எழுந்தருளுகிறாா். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் (கோரதம்) ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏப். 3-ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் காட்சி தந்த நம்பெருமாள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

பங்குனித் தோ் திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவை

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

