கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

35 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

மண்ணச்சநல்லூரில் 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மண்ணச்சநல்லூரில் 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அழகுநகா் பகுதியை சோ்ந்த சு. சம்மனசுமேரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

இதுதொடா்பாக மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி மற்றும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டம் ஆதனூா் பகுதியை சோ்ந்த சே.ஜெகபா் சாதிக் (40), திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் பகுதியை சோ்ந்த ரா.விஜயகுமாா் (எ) முழி குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகபா் சாதிக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, அவா் கடுமையான ஆயுதங்களால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றாா். அப்போது, விஜயகுமாருக்கு தலையில் காயமேற்பட்டது. விஜயகுமாா் தாக்கியதில் காவலா் செயலரசு என்பவா் காயமடைந்தாா். விஜயகுமாா் போலீஸாா் பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், காவலா் செயலரசும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.