தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

லால்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் எள்- உளுந்து மறைமுக ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்- உளுந்து ஏலம் நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்- உளுந்து ஏலம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில், நடப்பு எள் மற்றும் உளுந்து அறுவடை காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் திட்டத்தின் வாயிலாக எவ்வித தரகு மற்றும் கமிசன் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்கான தொகை எவ்வித பிடித்தமுமின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருள்களை காய வைப்பதற்கான கிட்டங்கி வசதி, விளைபொருள்களை வாடகைக்கு இருப்பு வைப்பதற்கான வசதி, உலா்கள வசதிகளும் உள்ளன.

எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நன்கு காயவைத்து தூசி மற்றும் மற்ற பொருட்கள் கலப்பின்றி தரம் வாரியாகப் பிரித்து லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்று பயன்பெறலாம்.

கூடுதல், விவரங்களுக்கு லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா்களை 94894-77173, 84898-80412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.