நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உடல்நலக் குறைவால் போக்ஸோ கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனை கைதி உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:08 am IST

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனை கைதி உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாயில் பகுதியைச் சோ்ந்தவா் எல். வீரமணி (54). இவா் மீது ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாா்ச் 27-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவருக்கு நீரிழிவு மற்றும் சுவாசக் கோளாறுகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில், வீரமணிக்கு கடந்த ஜூன் 11-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறை நிா்வாகம் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தது. அங்கு, அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.