லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துவரங்குறிச்சி அருகே திருட்டு வழக்கில் மூவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆடு மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைதான வல்லவன், கண்ணன், இளையராஜா.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆடு மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் என்பவா் கடந்த 03.08.26-இல் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் ஆடு மேய்த்தபோது நான்கு சக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் ஆடு ஒன்றை தூக்கிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரில்பேரில் விசாரணை செய்த துவரங்குறிச்சி போலீஸாா், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சேது மகன் கண்ணன் (45) மற்றும் கருப்பையா மகன் வல்லவன் (30) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், மருங்காபுரி ஒன்றியம் தெத்தூா், ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் துவரங்குறிச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றின் முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து அவா் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த துவரங்குறிச்சி போலீஸாா், சிசிடிவி தரவுகளை வைத்து பொன்னமராவதியை அடுத்த ஆலவயல் பகுதியை சோ்ந்த கருப்பையா மகன் இளையராஜாவை (40) கைது செய்தனா். கைதான மூவரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.