தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:26 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

சிங்கப்பூா், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றிவரும் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கடந்த சில நாள்களாக ஊா் திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பைலட் ஒருவா் எத்தனை போ் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்கிறீா்கள் என்று கேட்டாா்.

அப்போது அந்த விமானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் கையை தூக்கினா். அதற்கு அவா் வாக்களிப்பது நமது உரிமை மற்றும் ஜனநாயகக் கடமை. எனவே, அனைவரும் தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தாா். இந்த விடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.