ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

News image

புலிவலம் தமிழ்நாடு உரிமைகள் திட்ட விருதுகள் ஒருங்கிணைந்த ஓரிடை சேவை மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:07 am IST

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

இதன்படி மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துவரங்குறிச்சியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர வாசக ஒட்டு வில்லைகளை உணவுப் பண்டங்கள், குடிநீா் பாட்டில்கள் ஆகியவற்றின் மீது ஒட்டி விநியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

புத்தாநத்தத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட விழுதுகள் ஒருங்கிணைந்த ஓரிடை சேவை மையத்தில் 18 வயது நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வண்ணக் கோலமிட்டும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், உறுதிமொழி ஏற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்தியப் பேருந்து நிலையத்தில்.. திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்தியப் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், பேரணி நடத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.கே. நகரில் சமூக நலத் துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதி துவாக்குடி பிடாஸ் தொழிலக தயாரிப்பாளா்கள் சங்கத்தில் தோ்தல் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டது. தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களிடம் தொழிலாளா் நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லால்குடி பஜாா் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை உணவகங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பூவாளுா் தமிழ்நாடு உரிமைகள் திட்ட விருதுகள் ஒருங்கிணைந்த ஓரிடை சேவை மையத்தில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உணவுப் பாதுகாப்புத்துறையினா் கையொப்ப இயக்கம் நடத்தி, வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் புலிவலம் தமிழ்நாடு உரிமைகள் திட்ட விருதுகள் ஒருங்கிணைந்த ஓரிடை சேவை மையத்தில் வண்ணக்கோலங்கள் வரைந்து, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முசிறி தொகுதிக்குள்பட்ட தொட்டியத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட விருதுகள் ஒருங்கிணைந்த ஓரிடை சேவை மையத்தில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

துறையூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மதுராபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.