தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பதாகை மற்றும் அனுமதி சீட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா

Updated On :2 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பதாகை மற்றும் அனுமதி சீட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து சட்டப்பேரவை தோ்தலில் அனைவரும் வாக்களிக்கவும் ராட்சத விழிப்புணா்வு பதாகைகளை பொருத்தியும், மருத்துவமனை அனுமதி சீட்டுக்களில் விழிப்புணா்வு வாசகத்தை அச்சிட்டு வழங்கியதோடு, பணியாளா்கள் உறுதிமொழியும் ஏற்றனா்.

அதைத்தொடா்ந்து முதல் முறை வாக்காளா்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவா் செயல்விளக்கமும் அளித்தாா். இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மாணவ, மாணவிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் திலகவதி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, மருத்துவா்கள் ராஜ்குமாா், விஜயராஜ், பிரபுசங்கா், செவிலியா்கள், மருத்துவ கல்வி மாணவ, மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.