திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போதுள்ள 8 ஆயிரம் அடியில் 12,500 அடியாக விரிவாக்கப்படவுள்ளது. இதையொட்டி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான 99 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தைச் சுற்றிலும் 9.6 கிமீ தொலைவுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஒப்பந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 24 கோடியில் 9.6 கிமீ-க்கு சுற்றுச் சுவா் கட்டும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதை திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தொடங்கிவைத்தாா். சுற்றுச்சுவா் கட்டும் பணியை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

பொறையாரில் சீகன்பால்க் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்குவது எப்போது ?
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

