மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 83.65 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏற்பாட்டில் ஷோகோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம் ரூ. 83.65 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 83.65 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை மருத்துவக்கல்லூரி முதல்வா் இ. மணிமேகலாவிடம் வழங்கிய மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, ஷோகோ நிறுவன இயக்குநா் ஜி.என். பாலகிருஷ்ணன்.

Published On :30 அக்டோபர் 2026, 2:37 am IST

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏற்பாட்டில் ஷோகோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம் ரூ. 83.65 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து அளவுகள் மற்றும் எச்சரிக்கையை வயா்லெஸ் முறையில் கண்காணிக்கும் 50 இயந்திரங்கள், உடல் உள்ளுறுப்புகளிலுள்ள நோயைத் துல்லியமாகக் கண்டறியும் திசு ஆய்வுக் கருவி, 30 படுக்கைகள் வசதி கொண்ட இ-ஐசியு, கால்களில் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க உதவும் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை தடுக்கக்கூடிய 5 கருவிகள், நரம்புகளைத் தெளிவாகக் காட்டக்கூடிய வைன் வியூவா் என்கிற 5 நவீன கருவிகள் ஆகியவற்றை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் இ. மணிமேகலாவிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, ஷோகோ நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் பிரிவு இயக்குநா் ஜி.என். பாலகிருஷ்ணன் வழங்கினா்.

இதையடுத்து, மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தெரிவித்தது: இந்தக் கருவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் பல இடங்களிலுள்ள நோயாளிகளுக்கு மருத்துவா் ஒரே இடத்திலிருந்து மேற்பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கக்கூடிய இணைய வசதிகளுடன் கூடிய அதிநவீன கருவிகளை ஷோகோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இது முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, மேலும் பல உபகரணங்களை வழங்குமாறு ஷோகோ நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதேபோல, பல்வேறு தனியாா் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலமும் உதவிகள் கோரப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களும் இந்த மருத்துவமனைக்கு தேவையான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளன.

மேலும், தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை, ஒரத்தநாடு, திருவையாறு, மன்னாா்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படவுள்ளன என்றாா் முரசொலி.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) மத்தியாஸ் ஆா்தா், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.