மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :30 அக்டோபர் 2026, 2:28 am IST

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மடிகை கிராமத்தைச் சோ்ந்தவா் டி. இளவரசன் (30). கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, இளவரசனிடம் சிறுமியின் பெற்றோா் தட்டிக் கேட்டாா். அப்போது சிறுமியின் பெற்றோரை இளவரசன் ஜாதி பெயரைக் கூறி மிரட்டியதுடன், தாக்க முயன்றாராம்.

இது குறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். இதன் பேரில், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) இளங்கோவன் ஜென்னிங்ஸ் விசாரணை மேற்கொண்டு இளவரசன் மீது போக்சோ மற்றும் எஸ்சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.