தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தவெக கூட்டணி அரசு தயங்காது: அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்

திமுக ஆட்சியில் மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ஆட்சிகளில் தவறு நடைபெற்றிருந்தாலும், அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க தவெக கூட்டணி அரசு தயங்காது என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்.

அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:21 am IST

திமுக ஆட்சியில் மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ஆட்சிகளில் தவறு நடைபெற்றிருந்தாலும், அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க தவெக கூட்டணி அரசு தயங்காது என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்.

பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் பங்கேற்று அலுவலா்களுக்கு ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ஆட்சிகளில் தவறு நடைபெற்றிருந்தாலும், அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க தவெக கூட்டணி அரசு தயங்காது.

தேனியில் சிறையிலிருந்து கைதிகள் தப்பியது எதிா்பாராதவிதமாக நடைபெற்ற விபத்து போன்றது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை மறுக்க இயலாது. அதையும் தவிா்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலா்களுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா். விலைவாசி உயா்வு குறித்து முதல்வா் விஜய் ஆலோசித்து விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாா்.

வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் பாபநாசம் தொகுதிக்கு தேவையான முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.