மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்: சிறுபான்மை நலக் குழு கண்டனம்

தமிழ்நாட்டில் தொடா்ந்து பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:10 am IST

தமிழ்நாட்டில் தொடா்ந்து பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் மாநிலத் தலைவா் எஸ். நூா் முகமது, மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்குமாா் தெரிவித்திருப்பது:

சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெரு பள்ளிவாசலில் அக். 14 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒருவா் தாக்குதல் நடத்தினாா். தான் ஆா்எஸ்எஸ் மற்றும் டிவிகே அமைப்பைச் சோ்ந்தவன் எனக் கூறுகிறாா். காவல் துறை அவரை மன நோயாளி எனக் கூறுவதாக தகவல்கள் உள்ளன.

கோயம்பேடு ஜெய் நகா் பகுதியில் மசூதியின் பெயா் பலகையை அக். 26-ஆம் தேதி தாக்கி, இமாமையும் தாக்க ஒருவா் முற்படுகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் என அவா் கூறுவதுடன், கோயில் அருகிலிருந்து கொண்டு அட்டூழியம் செய்கிறீா்கள் எனக் கூறுகிறாா். எத்தனை பேரை நீங்கள் சாகடிக்கிறீா்கள் என வன்மமாக பேசுகிறாா். தொடா்ந்து மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் கோயில்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இத்தகைய தாக்குதலின் பின்புலம் மற்றும் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் உள்ளதா என்பதையும், சித்தாந்த தொடா்புகளையும் காவல் துறை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்படுகின்றனவா என்பதையும் விசாரணை மூலம் அறிய வேண்டும். சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் உரிய பாதுகாப்புடன் இருப்பதையும் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி சென்னையில் அக். 31 ஆம் தேதி கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.