கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இராஜராஜ சோழன் சதய விழாவில் 1,041 போ் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை தொடங்கிய மாமன்னா் இராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழாவில், மாலையில் 1,041 பரதநாட்டியக் கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை மாலை நடனமாடிய 1,041 பரத நாட்டியக் கலைஞா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:47 am IST

தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை தொடங்கிய மாமன்னா் இராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழாவில், மாலையில் 1,041 பரதநாட்டியக் கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக பெரிய கோயில் வளாகத்தில் மகா நந்திகேசுவரா் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தஞ்சாவூா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏறத்தாழ 40 குழுக்களைச் சோ்ந்த சிறுமிகள் முதல் பெரியவா்கள் வரை 1,041 போ் கலந்து கொண்டனா். சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு அனைவரும் நடனமாடினா். தவிர, பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமாா் 50 இசைக் கலைஞா்கள் கலந்து கொண்டு இசைத்தனா்.

இதில், பங்கேற்று நடனமாடியவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், பரதநாட்டிய குழுக்களின் குருக்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.