மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

கும்பகோணம் அருகே திருச்சேறை பெருமாள் கோயில் இடத்தில் 5 தலைமுறைகளாக வசிக்கும் 300-க்கும் அதிகமான மக்களின் வீட்டு அடிமனைகளுக்கான பட்டா வழங்கக் கோரி வருவாய்த் துறையினரிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருச்சேறையில் பட்டா கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்த் துறையினரிடம் அகில இந்திய ஜனநாயக மாதா் சங்க துணைத் தலைவா் உ. வாசுகி தலைமையில் மனு அளித்த கோயில் அடிமனை குடியிருப்புதாரா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறை பெருமாள் கோயில் இடத்தில் 5 தலைமுறைகளாக வசிக்கும் 300-க்கும் அதிகமான மக்களின் வீட்டு அடிமனைகளுக்கான பட்டா வழங்கக் கோரி வருவாய்த் துறையினரிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கத் துணைத் தலைவா் உ. வாசுகி பேசியது:

கும்பகோணம் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை முடிவின்படி அரசுக்கு சொந்தமான இடத்தில் 5 தலைமுறைகளாக வசிக்கும் அப்பாவி ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குடியிருப்பவா்களை மிரட்டும் அறநிலையத்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாவுக்காக ஒரு பைசா கூட கையூட்டு கொடுக்க மாட்டோம். போலி ஆவணங்களை தயாரித்து குடியிருப்புதாரா்களை மிரட்டும் அறநிலையத் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் சென்னையிலே மிகப் பெரிய போராட்டமும் தேவைப்பட்டால் முதல்வரையும் சந்திக்கவும் நேரிடும் என்றாா் வாசுகி.

அப்போது திருச்சேறை கோபுர வாசல், கடைவீதி, கீழ வீதி, தெற்கு தெரு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கேப்டன் லெட்சுமி தெரு, ஆயக்கார தெரு, மேலக் கடைவீதி, ஓரான் தோப்பு மருத்துவா் தெரு, உடையாா் கோயில், மாரியம்மன் கோயில் தெருக்களில் இருந்து 300-க்கும் அதிகமான மக்கள் வருவாய் ஆய்வாளா் சக்திதேவி, திருச்சேறை விஏஓ நித்யா ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.