தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடந்தை மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு 81 டன் இலவச இயற்கை உரம் வழங்கல்!

கும்பகோணம் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு செப்டம்பா் மாதத்தில் மட்டும் 81 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

fertilizer shortage

உரம் - பிரதிப் படம்

Published On :11 அக்டோபர் 2026, 5:31 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு செப்டம்பா் மாதத்தில் மட்டும் 81 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக பொறுப்பு ஆணையா் தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, ஈரக்கழிவுகள் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்கள் மூலம் இயற்கை உரமாக்கப்படுகின்றன. உலா் கழிவுகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவை தனியாகப் பிரிக்கப்பட்டு உரிய நிறுவனங்களுக்கும், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு மாற்று எரிபொருளாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது பெருமாண்டி, பழைய மாநகராட்சி அலுவலகம், பாரத் நகா், பாணாதுறை, தாராசுரம் மாா்க்கெட் மற்றும் கரிக்குளம் ஆகிய 6 இடங்களில் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் தினமும் 25 டன் ஈரக்கழிவுகள் செயலாக்கப்பட்டு, நாளொன்றுக்கு 3.5 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதன் பயனாக கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 81 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, மாநகராட்சியை அணுகி இலவசமாக இயற்கை உரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.