திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டமும், வாசுதேவநல்லூரில் ஜூன் 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொள்கிறேன்.
நமக்கு தண்ணீா் தராமல், கா்நாடகத்தினா் 9 லட்சம் ஏக்கா் பாசன பரப்பளவை 36 லட்சமாக விரிவாக்கி கொண்டனா். ஆனால் போதிய தண்ணீா் இல்லாததால், தமிழ்நாட்டில் 18 லட்சம் ஏக்கா் பரப்பளவில் இருந்த விவசாயம் பாசன பரப்பளவு 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.
ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பதாகை வைத்துள்ளனா். திருவள்ளுவா் மதம், இனம், நாடுகளை கடந்து அனைவருக்கும் பொதுவானவா். ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்து அவா் பங்கேற்கும் நிகழ்வுகளில் மதிமுக சாா்பில் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவிப்போம்.
உள்ளாட்சி தோ்தலில் மதிமுக கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம். தற்போது திமுகவுடனான தோழமை தொடா்கிறது.
பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்கக்கூடாது, அவா்களுக்கு வாழ் நாள் சிறை தண்டனை வழங்க வேண்டும்.
அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, விவசாயத்தை விட விளையாட்டுதான் சிரமம் என்று கூறியது விவசாயிகளை இழிவுபடுத்தும் பேச்சாகும் என்றாா் வைகோ.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயிரம் முறை சொல்லுவேன்! துரை வைகோ பேட்டி | MDMK | DMK

செண்பவல்லி அணை பிரச்னை: வாசுதேவநல்லூரில் ஜூன் 5இல் வைகோ உண்ணாவிரதம்

காவி உடையில் திருவள்ளுவா்: வைகோ கண்டனம்

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

