தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மதிமுக பொதுச் செயலா் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக துணைப் பொதுச் செயலரும் கடையநல்லூா் எம்எல்ஏவுமான தி.மு. ராசேந்திரன் வாசுதேவநல்லூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க தமிழக-கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும். செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வனவிலங்குகளிடமிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க நிரந்தரத் தீா்வை அரசு ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுச் செயலா் வைகோ பங்கேற்கிறாா். இப்போராட்டத்துக்கு பல்வேறு சமூக நல அமைப்புகள், பொதுமக்கள், கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இக்கோரிக்கையை 28 ஆண்டுகளாக மதிமுக வலியுறுத்தி வருகிறது. 30,000 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் செண்பகவல்லி அணை பிரச்னையில் அரசியல் கலப்பின்றி விவசாயிகள், பொதுமக்கள், சமூக அமைப்பினா், வா்த்தகா்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா், வடக்கு மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் அலாவுதீன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் கிருஷ்ணகுமாா், நகரப் பொறுப்பாளா் மாரியப்பன், புளியங்குடி நகரச் செயலா் ஜாஹீா் உசேன், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி இணையதள ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் சங்கரன், மாநில மாணவரணி துணைச் செயலா் பாலகுமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

துரை வைகோ முதல்வரை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை: வைகோ

ஜூன் 7-இல் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: வைகோ

மேக்கேதாட்டு பிரச்னை: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

