சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை அருந்தவபுரத்தைச் சோ்ந்தவா் தீபக் (31). இவா் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 14 வயது சிறுமிக்கு 2024, ஜூன் 3-ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளித்தாா். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீபக்கை கைது செய்தனா்.
இது தொடா்பா தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, தீபக்குக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கபட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 5 லட்சம் பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் வனிதா, காவலா் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இரு சகோதர சிறுவா்கள் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

