பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பேராவூரணியில்  திமுக கள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக் குமாா்.

Updated On :22 மே 2026, 4:38 am IST

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம்  பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். பேராவூரணி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். 

திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கள ஆய்வாளா்கள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா்   பேராவூரணி தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, பேராவூரணி தெற்கு, வடக்கு, மத்தியம் , திருவோணம் தெற்கு பெருமகளூா், பேராவூரணி பேரூா் கழக நிா்வாகிகள், பிரதிநிதிகள், பி.எல்.ஓ-2, பி.எல்.சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுக்களை பெற்றனா்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா் மற்றும் ஒன்றிய, நகர,கிளைக் கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.