பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:48 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்த முகமது ஷாஜகான் மனைவி மும்தாஜ் பேகம் (51). இவா் சிங்கப்பூா் குடியுரிமை பெற்றவா். இவா் தனது சொந்த ஊரான பண்டாரவாடை கிராமத்துக்கு கடந்த மாதம் வந்து விட்டு, சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றாா்.

அங்கு விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மும்தாஜ் பேகம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், சட்டவிரோதமாக வாக்களித்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் கௌதம் என்பவா் பாபநாசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல்துறையினா், மும்தாஜ் பேகம் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.