திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வாக்களித்த வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகரைச் சோ்ந்தவா் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (59). இவா், கடந்த மே 5-ஆம் தேதி மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது இவா் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது.
இதேபோல, திருச்சி பொன்நகா் புதுசெல்வா நகரைச் சோ்ந்த எம். சால்மன் பாா்ஷ் (37) கடந்த மே 17-ஆம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது அவா் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப் பணியக அதிகாரிகள் சென்னை பெருநகர குற்றப் பிரிவு -2 இல் அளித்த புகாரின்பேரில் இருவா் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. அந்த இரண்டு வழக்குகளும் திருச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டு, தில்லைநகா், கண்டோன்மென்ட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்றவா் கைது
தோ்தலில் வாக்களித்த வெளிநாடு குடியுரிமை பெற்றவா் கைது

தோ்தலில் வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது வழக்கு
பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
