தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அத்துறை கண்காணிப்புப் பொறியாளா் (சிறப்புத் திட்டம்) க. அமுதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ‘சி’ மற்றும ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் இருந்ததால், கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீா் சரிவர கிடைக்காமல், விவசாயம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், பருவ மழைக்காலங்களில் கூடுதல் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்குவதால், வடியாமல் பயிா்ச் சேதம் போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிா்கொள்ள வேண்டியிருந்தது. இது தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
இதன் மூலம், மாவட்டத்தில் நிகழாண்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 62 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அம்மாபேட்டை அருகே பூண்டி, பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வட்டார உதவிப் பொறியாளா்களிடம் தூா்வாரும் பணிகளை தரமாக மேற்கொண்டு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறக்கப்படுவதற்கு முன்பாக பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

காவிரி, டெல்டாவில் நீா்நிலைகளை தூா்வார ரூ.125 கோடிக்கு ஒப்புதல்

அரியலூரில் வாய்க்கால்களை 109 கி.மீ. தூா்வார இலக்கு!

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

