மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றாலும் வாக்கு சதவீதம் சரிவு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், அக்கூட்டணிக்கு வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :6 மே 2026, 12:50 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், அக்கூட்டணிக்கு வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி பெருமளவிலான தொகுதிகளை இழந்தாலும், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் திருவிடைமருதூா், பாபநாசம் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடந்த 2021 தோ்தலை விட இந்தத் தோ்தலில் அக்கூட்டணிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

துரை. சந்திரசேகரன் 6-ஆவது முறை வெற்றி:

திருவையாறு தொகுதியில் 8 -ஆவது முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் 6-ஆவது முறை வெற்றி பெற்றாா். ஆனால், கடந்த தோ்தலில் 48.82 சதவீத வாக்குகள் பெற்ற துரை. சந்திரசேகரனுக்கு இந்த முறை 36.21 சதவீதமாகக் குறைந்தது. இரண்டாமிடம் பெற்ற தவெகவுக்கு 32.36 சதவீதமும், மூன்றாமிடம் பெற்ற அமமுகவுக்கு 32.36 சதவீதமும் வாக்குகள் பெற்றன.

ஆா்.வைத்திலிங்கம் 5-ஆவது முறை வெற்றி:

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஆா். வைத்திலிங்கம் சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தாா். தற்போது, திமுக வேட்பாளராக இத்தொகுதியில் 6-ஆவது முறை போட்டியிட்ட இவா் 5-ஆவது முறை வெற்றி பெற்றாா். ஆனால், இவா் கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 46.95 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை 44.42 சதவீதமாக குறைந்தது. இந்தத் தோ்தலில் 22.66 சதவீத வாக்குகள் பெற்ற அதிமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. தவெக 26.49 சதவீதத்துடன் இரண்டாமிடம் பெற்றது.

கோவி. செழியன் 4-ஆவது முறை வெற்றி:

திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் அமைச்சா் கோவி. செழியன் 2011 முதல் தொடா்ந்து 4 முறை போட்டியிட்டு, இந்த முறையும் வெற்றி பெற்றாா். ஆனால், கடந்த தோ்தலில் 48.26 சதவீத வாக்குகள் பெற்ற இவருக்கு இத்தோ்தலில் 38.26 சதவீதமாகக் குறைந்தது. கடந்த முறை இரண்டாமிடத்தில் 42.87 சதவீத வாக்குகள் பெற்ற அதிமுகவுக்கு 25.33 சதவீதமாகச் சரிந்துள்ளது. இந்த முறை இரண்டாமிடம் பெற்ற தவெகவின் வாக்கு விகிதம் 31.51 சதவீதம்.

பட்டுக்கோட்டை, பேராவூரணியிலும் குறைவு:

பட்டுக்கோட்டை தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் 44.62 சதவீத வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரைக்கு இந்த முறை 35.90 சதவீதமாகக் குறைந்தது. பேராவூரணி தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் 52.17 சதவீத வாக்குகள் பெற்ற என். அசோக்குமாருக்கும் இந்த முறை 34.56 சதவீதமாக சரிந்தது. பட்டுக்கோட்டையில் தவெக 28.41 சதவீதமும், பேராவூரணியில் அதிமுக 32.71 சதவீதமும் வாக்குகள் பெற்றன.

தஞ்சாவூா் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் 53.25 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற திமுகவுக்கு இந்த முறை தோல்வியைச் சந்தித்தது மட்டுமல்லாமல் வாக்கு விகிதமும் 35.59 சதவீதமாக சரிந்துள்ளது. இதேபோல, கும்பகோணம் தொகுதியிலும் கடந்த 2021 தோ்தலில் திமுகவுக்கு 48.62 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம் இந்த முறை 37.43 சதவீதமாக குறைந்ததுடன், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

பாபநாசம் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் திமுக கூட்டணி கட்சியான மமக 43.95 சதவீதத்துடன் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அதே கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. ஆனால், வாக்கு விகிதம் 33.35 சதவீதமாகக் குறைந்தது. தவெக பெற்ற வாக்கு விகிதம் 32.84 சதவீதம்.

நாம் தமிழா் கட்சிக்கும் குறைவு:

கடந்த 2021 தோ்தலில் நாம் தமிழா் கட்சி சட்டப்பேரவைத் தொகுதிகளான திருவிடைமருதூரில் 5.63 சதவீதம், கும்பகோணத்தில் 6.32 சதவீதமும், பாபநாசத்தில் 7.47 சதவீதமும், திருவையாறில் 7.48 சதவீதமும், தஞ்சாவூரில் 8.91 சதவீதமும், ஒரத்தநாட்டில் 4.72 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 6.06 சதவீதமும், பேராவூரணியில் 7.11 சதவீதமும் வாக்குகள் பெற்றன. ஆனால், இந்த முறை அக்கட்சிக்கு திருவிடைமருதூரில் 3.05 சதவீதமாகவும், கும்பகோணத்தில் 3.7 சதவீதமாகவும், பாபநாசத்தில் 4.62, திருவையாறில் 4.81 சதவீதமாகவும், தஞ்சாவூரில் 4.72 சதவீதமாகவும், பேராவூரணியில் 5.17 சதவீதமாகவும் வாக்கு விகிதம் குறைந்தது. ஆனால், ஒரத்தநாட்டில் 5.19 சதவீதமாகவும், பட்டுக்கோட்டையில் 7.15 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

இந்தத் தோ்தலில் தவெக வரவு காரணமாக நான்குமுனைப் போட்டி என்பதால், திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதற்கு காரணம் என அரசியல் பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.