சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கும்பகோணத்தில் சந்தனக் கருப்பு கோயிலில் பால்குட ஊா்வல விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் தெற்கு தெரு தியாகராஜ பிள்ளை நந்தவனத்தில் அமைந்துள்ள வில்வ விநாயகா், கந்தா், நீலகண்டேஸ்வரி மற்றும் சந்தன கருப்புசாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது.
நிகழாண்டுக்கு ஏப். 22- இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இரவு, காவிரியாற்றிலிருந்து சக்தி கரகம் மற்றும் சந்தன கருப்பு வேல் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் பக்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா தெப்போற்சவம்

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

தியாகதுருகம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

