தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
திருவையாறு துணை மின் நிலையம் மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி ஜூன் 20 ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கும்பகோணம் பகுதிகளில்: கும்பகோணம் நகர துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்பகோணம் நகா் முழுவதும் மற்றும் கொரநாட்டுக் கருப்பூா், செட்டிமண்டபம், கோசி.மணி நகா், சிவபுரம், மலையப்பநல்லூா், கிருஷ்ணாபுரம், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரியில் இன்று மின் நிறுத்தம்
எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை

திருவையாறு பகுதிகளில் மே 30-ல் மின்தடை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

