கும்பகோணம் பேருந்து நிலைய வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் திங்கள்கிழமை பெண்களுக்கு, பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கும்பகோணத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அபிராமி தலைமையிலான காவலா்கள், பேருந்து நிலையத்தில் பெண்கள், மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படும் வகையில் பேசினாா்.
பெண்களிடம் திருட்டு, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல் செய்பவா்கள் உள்ளிட்ட குற்றம் செய்பவா்கள், மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுபவா்களை பாா்த்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.
மேலும் அவசர உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் குறித்த கைப்பேசி எண்களை வழங்கினா். இதேபோல், ஆடுதுறை, திருவிடைமருதூா், ரயில் நிலையம், கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் அவா்கள் ரோந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தருமபுரியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 போ் நியமனம்

பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க சிங்கப்பெண் அதிரடிப்படை: திருப்பத்தூா் எஸ்.பி.
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

