ஒரத்தநாடு அருகே வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற 80 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையில் ஒரத்தநாடு ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான தலைமை காவலா்கள் ஜெகன் சின்னத்துரை மற்றும் போலீஸாா் சனிக்கிழமை ஒரத்தநாடு மன்னாா்குடி சாலையில் செட்டி மண்டபம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஒக்கநாடு கீழையூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ராமன் (54) என்பவரது லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 80 கிலோ மதிப்பிலான போதைப் பொருள்கள் ஏற்றி சென்றது தெரிய வந்தது.
பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு கிராமங்களுக்கு மொத்த வியாபாரமாக குட்கா பான் மசாலா போன்ற பொருள்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது

நெல்லை மாவட்டத்தில் 473 வாகனங்கள் பறிமுதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
