பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரயிலில் அடிபட்டு செங்கல் சூளை உரிமையாளா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை நள்ளிரவு செங்கள்சூளை உரிமையாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:58 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை நள்ளிரவு செங்கள்சூளை உரிமையாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

பாபநாசம் பெரியாா் நகரில் வசித்து வந்தவா்  ரமேஷ் (50). இவா் செங்கல் சூளை நடத்தி வந்தாா். இந்நிலையில் ரமேஷ் புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சென்ற சென்னை - ராமேசுவரம் விரைவு  ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற  கும்பகோணம் ரயில் நிலைய ஆய்வாளா்  அமலி  மற்றும் போலீஸாா் ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.