பம்பப்படையூா் நாதன்கோவில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ராமானுஜ சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை திருமஞ்சனம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூா் நாதன்கோவிலில் நந்திபுரத்து விண்ணகரம் என்றழைக்கபடும் செண்பகவல்லித்தாயாா் சமேத ஜகந்நாதப்பெருமாள் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் தற்போது நான்காம் நாளாக வைகாசி பிரம்மோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் மடத்தில் எழுந்தருளியிருக்கும் பொன்னடிக்கால் ஜீயா் சுவாமி மங்கள சாசனம், வானமாமலை மதுரகவி ராமானுஜ சுவாமி மங்கள சாசனத்துடன் உத்ஸவா் திருமடத்துக்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் கருட வாகனத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா சென்றாா். புதன்கிழமை பெருமாள் உள்பிரகார புறப்பாடும், மாலையில் அனுமந்த வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ பிந்துமாதவா் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா
குவாகம் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

