தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

பாபநாசம் அருகே உள்ள கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 12:23 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 

அம்மாபேட்டை காவல் சரகம், உடையாா்கோவில் கிராமத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் துளசிராமன் (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 16-ஆம் தேதி ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்க வந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா் வீடு திரும்பிய அந்தப் பெண்ணிடம் குடும்பத்தினா் கேட்டபோது, அவரால் என்ன நடந்தது என்பதை கூறமுடியவில்லையாம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் துளசிராமன் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, துளசிராமனை போலீஸாா் கைது செய்து, நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.